Qatar NewsQatar Tamil News

கத்தார் பிரபல உணவகத்தின் ஒன்பது கிளைகளுக்கு சீல் வைத்தது வர்த்தக அமைச்சு!

கத்தார் பிரபல உணவகத்தின் ஒன்பது கிளைகளுக்கு வர்த்தக அமைச்சு சீல் வைத்து இழுத்து மூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கான ப்ரதர்ஸ் (Afghan Brothers) எனப்படும் பிரபல உணகவத்தின் ஒன்பது கிளைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக கத்தார் வர்த்தக அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு டிலிவரி மற்றும் உணவகங்களில் பரிமாமறப்படும் உணவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகளவில் கட்டணங்கள் அறிவிட்டமையினாலேயே இவ்வுணவகங்கள் இரண்டு வாரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவுத் தெரிவுகளை மட்டுப்படுத்திய குற்றத்திலும் உணவக நிருவாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கத்தாரின் பர்வா வில்லேஜ், அல் வக்ரா, அல் அஸீஸியா, அல் ரய்யான், அல் நாஸர், பின் ஒம்ரான் விமான நிலைய வீதி, உம்மு ஸலால் அலி மற்றும் அல் மிக்ராப் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது கிளைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் ரமழான் மாதத்தில் அரச & தனியார் அலுவலகங்களுக்கான பணி நேரங்கள் அறிவிக்கப்பட்டன!

Related Articles

Leave a Reply

Back to top button
%d