கத்தாரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று! ஜன-22 வரை தூதரகம் மூடப்படுகிறது!

Sri Lankan Embassy in Qatar Closed until 22.01.2022

கத்தாரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதனால், எதிர்வரும் ஜன-22 வரை தூதரகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல்தலை கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது உத்தியோக முகநூல் பக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளது.

கத்தாரில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலயில், கத்தாரின் தூதகரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

என்றாலும் தூதகரம் சார் அவசர பணிகளுக்கு +974 77388977 என்ற தொலைபேசி இலக்கத்தின் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், தூதரகமானது எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்பதாக தூதரகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply