கத்தாரில் இன்று (ஜன-08) முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன!

New Covid-19 Restrictions come to effect from today in Qatar

கத்தாரில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த அமைச்சரவையின் போது எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் இன்று (08.01.2022) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

  • கார்களில் செல்லும் போது வாகன ஓட்டுநருடன் சேர்த்து 4 பேர்கள் மாத்திரம் பயணிக்க வேண்டும். இந்த நடைமுறையிலிருந்து ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப அங்கத்தவர்கள் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர்.
  • திருமண வைபங்கள் ஹோட்டல்களில் மற்றும் திருமண மண்டபங்கள் மாத்திரம் பின்வரும் நிபந்தனைகளுடன் நடத்தப்படல் வேண்டும். மூடப்பட்ட திருமண மண்டபமாயின், 30 கொள்திறனில் மாத்திரம் நடத்தப்படல் வேண்டும். அதிகபட்டமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 பேர்கள் மாத்திரம் பங்கு கொள்ள முடியும். திறந்த திருமண மண்டபமாயின் 50 கொள்திறனில் திருமணங்கள் நடத்தப்பட முடியும். என்றாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அதிகபட்ச 80 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பூங்காக்கள், கொர்னிச், மற்றும் கடந்கரைகளைப் பொறுத்தவரை 15 பேர் வரை மாத்திரம் அமர அல்லது ஒன்று கூட முடியும்.
  • கடற்பிரயாணங்களைப் பொறுத்த வரையில், சுற்றுலாப் படகுகளாயின் 30 சதவீத கொள்திறனில், தடுப்பூசி பெற்ற அதிகபட்சமாக 15 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரத்தியேக படகுகளாயின், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அதிகபட்சமாக 12 நபர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். என்றாலும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள் இந்த நிபந்தனையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
  • பொதுப் போக்குவரத்து பஸ்களைப் பொறுத்த வரையில், 60 சதவீதத்திற்கு அதிகரிக்காமல் பயணிகளை ஏற்ற முடியும். அனைத்து பயணிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
  • சமூக ஒன்று கூடல்களைப் பொறுத்த வரையில் மூடிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேருக்கும் (அதிகபட்சம்), திறந்த வெளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 பேர் வரை மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அத்துடன் முகக் கவசம் அணிவது அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்பது இதிராஷ் செயலியின் பாவனையும் நடைமுறையில் இருக்கும்

வணிக நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

ஷாப்பிங் மையங்கள்:
*மொத்த சாதாரண திறனில் 75%க்கு அதிகரிக்காத திறனுடன் திறக்கப்படும்.
*உணவகக் கூடங்களில் மொத்த சாதாரண திறனில் 30%க்கு அதிகரிக்காமல் திறக்க அனுமதி
* பூஜை இடங்கள், உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறைகளை திறக்க அனுமதி.
*தடுப்பூசி பெற்ற வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

பிரபலமான சந்தைகள்:
*மொத்த சாதாரண திறனில் 75%க்கு அதிகரிக்காத திறனுடன் திறக்கப்படும்..
*தடுப்பூசி பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
*தடுப்பூசி பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பின்வரும் திறன்களின்படி வீட்டிற்குள் சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்:
* “க்ளீன் கத்தார்” சான்றிதழைக் கொண்ட உணவகங்களுக்கு 50%.
* முன் தகுதி பெற்ற உணவகங்களுக்கு 30%. அதிகரிக்காத திறனுடன் திறக்கப்படும்.

தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பின்வரும் திறன்களின்படி திறந்தவெளியில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள்
* “க்ளீன் கத்தார்” சான்றிதழைக் கொண்ட உணவகங்களுக்கு 75%.
* முன் தகுதி பெற்ற உணவகங்களுக்கு 40%.
* திறந்த பஃபே சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
* ஷிஷா சேவைகள் உணவகங்க்ள மற்றும் ஹோட்டலில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
* சப்பாட்டு மேசைகளுக்கிடையில் உரிய இடைவெளி மற்றும் அவற்றுக்கிடையேயான பாதுகாப்பான தூரத்தை பின்பற்றுதல்

சுகாதார கிளப்புகள், ஜிம்கள் மற்றும் மசாஜ் மையங்கள்:
*மொத்த சாதாரண திறனில் 50%க்கு அதிகரிக்காத திறனுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
*தடுப்பூசி பெற்ற வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
* நோய்த்தடுப்பு ஊசி போடப்பட்ட அனைத்து ஊழியர்களும் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
*ஷவர் மற்றும் உடை மாற்றும் அறைகள், நீராவி அறைகள், மொராக்கோ குளியல் மற்றும் சானாக்கள் ஆகியவற்றை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்..

நீச்சல் குளங்கள், நீர் பூங்காக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள்:
*மூடப்பட்ட இடங்கள்: மொத்த சாதாரண திறனில் 50%க்கு அதிகரிக்காத திறனுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
*தடுப்பூசியின் தேவையான அளவுகளைப் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நுழைய அனுமதி.
*திறந்தவெளிகள்: மொத்த சாதாரண திறனில் 75%க்கு அதிகரிக்காமல் இருத்தல் வேண்டும்

அழகு மற்றும் முடிதிருத்தும் நிலையங்கள்:
*மொத்த சாதாரண திறனில் 50%க்கு அதிகரிக்காத திறனுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது
*தடுப்பூசி பெற்ற வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
*தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அனைத்து வணிக நடவடிக்கைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை இடைவெளி மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது,

மேற்படி அறிவிப்புக்களை கத்தார் வாழ் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என்பதோடு, தவறினால் உரிய சட்ட ரீதியான நடவடிக்கைககளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதாக என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply