கத்தாரில் இன்று 3487 புதிய கொரோனா தொற்றாளர்கள்! சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18791 ஆக உயர்வு!

கத்தாரில் கடந்த 24 மணித்தியாலத்தில் (08.01.2022) புதிதாக 3487 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  18791 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கத்தாரில் கொரோனா பரவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்த அதிகாிப்பானது எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்பதாக கத்தார் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வகை இன்றைய நிலவரம் (08.01.2022) மொத்த எண்ணிக்கை
புதிய தொற்றாளர்கள் 3487 266962
குணமடைந்தவர்கள் 411 247553
மரணங்கள் 00 618
வழங்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் 7109 5275659
புதிய PCR எண்ணிக்கை 6,750 3223877
கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,
  • வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறும்,
  • சமூக இடைவெளியகளைப் பேணிக்கொள்ளுமாறும்,
  • கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்துமுன்னெச்சரிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply