Qatar Tamil News

கத்தாரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! டிசம்பர் 31 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

கத்தாரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் 31 முதல் புதிய கொவிட் 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தாரின் பிரதமரும், உள்துறை அமைச்சருமான  H E Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al Thani  அவர்களின் தலைமையில் இன்று கத்தார் அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வரும் கொவிட் 19 கட்டுப்பாடுகள் விதிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் 31ம் திகதி முதல் நடைமுறைக்குவரவுள்ளன.

  • திறந்த மற்றும் மூடிய அனைத்து இடங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்றாலும் திறந்த வெளியில் போட்டிகளுக்கு பயிற்சியில் ஈடுபடுவர்கள் மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மாநாடுகள், நிகழ்வுகள் அனைத்தின் பங்குபற்றும் நபர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திறந்த வெளியில் 75 சதவீத கொள்திறன் அடிப்படையிலும், மூடிய பகுதிகளில் 50 சதவீத கொள்திறன் அடிப்படையிலும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. என்றாலும் தடுப்பூசி பெற்றவர்களாயின் 90 சதவீத கொள்திறனுக்கு அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசியைப் பெறாதவர்கள் அன்டீஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
  • மாநாடுகள், நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்களில் கத்தார் பொது சுகாதார அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்படும் கொரோனா பரவலைத் தடுக்கும் விடயங்கள் அனைத்தும் மீண்டும் கடைபிடிக்கப்படும். கட்டுப்பாடுகள் விதித்தல், கண்காணித்தல் தொடர்பான விடயங்களில் கத்தார் சுகாதார அமைச்சு உள்துறை அமைச்சுடன் இணைந்து செயற்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதம் கட்டணம் 50 சதவீமாக குறைக்கப்பட்டது!

Related Articles

Leave a Reply

Back to top button
%d