நடுவானில் பறந்து கொண்டிருந்த கத்தார் எர்வெய்ஸ் விமானத்தில் பிறந்த குழந்தை!

baby born on Qatar Airways flight

நடுவானில் பறந்து கொண்டிருந்நத கத்தார் எர்வெய்ஸ் விமானத்தில் குழந்தையொன்று பிறந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான கத்தாரிலிருந்து உகன்டாவிற்கு பறந்த விமானமொன்றில்  பயணித்த பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார்.

கனடாவில் பல்பலைக்கழகமொன்றில் பேராசிரியராக பணியாற்றும் Aisha Khatib எனும் வைத்தியரினால் விமானப் பணிப்பெண் ஒருவரின் உதவியுடன் பிரசவம் சம்பவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணி பிரசவ வலியால் துடித்த நேரத்தில் முதன்மை விமானப் பெண் ”விமானத்தில் தற்போது வைத்தியா்கள் யாரும் இருக்கின்றீர்களா” என்ற விசேட அறிவித்தலைத் தொடர்ந்து Aisha Khatib அவர்கள் முன்வந்து விமானப் பணிப்பெண் ஒருவரும்  உதவியுடன் பிரசவத்திற்கான பணிகளை நிறைவேற்றியமாக வைத்தியா் Aisha Khatib அவர்களே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்கள்.

மேற்படி பெண் குழந்தையைப் பிரசவித்த பெண்ணும், குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பு – விமானப் பயணங்களின் போது 36 வாரங்கள் நிறைந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த செய்தியுடன் தொடர்புடைய பயணி 35 வாரங்கள் நிறைந்த கர்ப்பிணியாக இருந்தமையினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : கத்தாரிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று! ஜன-22 வரை தூதரகம் மூடப்படுகிறது!

 

Leave a Reply