கத்தாரில் காலாவதியான உணவுப் பொருட்களை மீள பொதி செய்த களஞ்சியசாலை சிக்கியது!

கத்தாரில் காலாவதியான உணவுப் பொருட்களை மீள பொதி செய்து வந்த களஞ்சியசாலையொன்று சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  வக்ரா நகராட்சி  அதிகார  பிரதேசத்தின் கீழ் அமைந்துள்ள பிர்கத் அல் அவாமிர் நகரத்தில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பிலேயே இந்த களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்தார் நகராட்சி அமைச்சு, உள்துறை அமைச்சு மற்றும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சுகளுடன் இணைந்து அல் அவாமிர் நகரில் நடத்திய விசேட சோதனையின் போதே இந்த களஞ்சியசாலை சிக்கியுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சுற்றி வலைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி களஞ்சியசாலையில், காலாவதியான உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு, காலாவதி திகதிகள் நீக்கப்பட்டுள்ள புதிய திகளில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கத்தாரின் வீசா விதிமுறைகளைப் மீறிய நபர்கள் பணிக்கும் அமர்தப்பட்டிருந்ததாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் உணவுப் பொருட்களின் திகதிகளை மாற்றியமைச்ச பயனப்படுத்தப்பட்ட கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் தனது 16வது கிளையை அசீசியா நகரில் திறந்தது LULU குழுமம்!

Leave a Reply