கத்தாரில் தனது 16வது கிளையை அசீசியா நகரில் திறந்தது LULU குழுமம்!

Lulu Opens its 16th store in Qatar
கத்தாரில் தனது புதிய கிளையை அசீசியா நகரில்  நேற்றைய தினம் (01.12.2021) மக்கள் சேவைக்காக LULU குழுமம் திறந்துள்ளது. இது கத்தாரில் திறக்கப்பட்டுள்ள LULU குழுமத்தின் 16 வது கிளையாகும். உலகளவில் இது LULU குழுமத்தின் 220வது கிளையாகும்.
மேற்படி புதிய கிளையானது, அசீசியா நகரில் சல்வா விதிக்கு செல்லும் திசையில் 100,000 சதுர அடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அசீசியா நகர் மற்றும் அதனை சூழ வாழும் மக்கள் இலகுவாக வாகனங்களுன் வந்து செல்லக் கூடிய வகையில் விசாலமான பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்துப்பட்டுள்ளதாக LULU  நிருவாகம் தெரிவித்துள்ளது.
புதிய கிளையானது  நவீன  ஷாப்பிங் சூழலைக் கொண்டுள்ளதுடன், ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நியாயமான விலையில் அணுகுவதற்கு வசதியாக இருக்கும் என LULU  உரியமையாளர் யூஸுப் அலி அவர்கள் தெரிவித்தார்.
கத்தார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையான மக்களால் கொள்வனவுக்கான நாடப்படுகின்ற தரமான சுபர்மார்க்கட்களில், LULU ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply