கத்தார் தேசிய தின அணிவகுப்பு காலை 9 மணிக்கு! பொதுமக்களுக்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது!

Qatar National Day parade in the morning

கத்தாரின் தேசிய தினம் நாளை (டிசம்பர் – 18) கொண்டாடப்படவுள்ள நிலையில், தேசிய தின அணிவகுப்பு (The Qatar National Day parade ) கொர்னிச் பகுதிகளில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என்பதாக தேசிய தின நிகழ்வுகளுக்குப் பொறுப்பான ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

கத்தார் தேசிய தின அணிவகுப்பு நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் காலை 7.30 முன்பதாக வருகை தருமாறும், நுழைவாசல் 7.30துடன் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொர்னிச் பகுதியில் பொது மக்களுக்காக இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொர்னிச் வடக்கு பக்கமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 6,557 பேரும், தெற்குப் பக்கமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 2,706 பேரும் ஒன்று கூடமுடியும். மேலும் 9,586 எண்ணிக்கையான பொதுமக்களே கத்தார் தேசிய தின அணிவகுப்பு நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு்க் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

Leave a Reply