கத்தாரில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

First Omicron positive case reported in Qatar

கத்தாரில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொதுச்சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் விபரத்தை வெளியிடும் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு திரும்பியவர்களிடமிருந்தே இந்த நான்கு ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுள்ளனர். நாள்வரில் மூவர் கொரோனா தடுப்பூசி இரண்டையும் செலுத்திக் கொண்டவர்களாவர். நான்காமவர் இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக ஒமிக்ரோன் தொற்று தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது முதல் இதுவரை 70 நாடுகளுக்கு பரவியுள்ளது. அத்துடன் இது வேகமாக பரவி வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரேனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கத்தாரில் வாழ் அனைவரும் பின்வரும் 3 விடயங்களை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

1. கொரோனாவுக்கான 3வது தடுப்பூசியை உரியவர்கள் பெற்றுக்கொள்ளுங்கள்

கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களை தவறாது கடைபிடிக்கும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 19ம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது

Leave a Reply