2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணம்! அல்ஜீரியா சம்பியன் கிண்ணத்தை சுபீகரித்தது

Algeria win the FIFA Arab cup 2021

2021ம் ஆண்டுக்கான பீபா அரபுக் கிண்ணத்தை சம்பியன் கிண்ணத்தை அல்ஜீரியா சுபீகரித்துள்ளது. கத்தாரின் தேசிய தினமான இன்று பீபா 2022 கால்ப்பந்து மைதானங்களில் ஒன்றான அல் பைத் மைதானத்தில் இன்று கத்தார் நேரப்படி மணிக்கு இரவு 8 போட்டி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின

கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் போட்டி நிகழ்ச்சிகளைக் காண நேரடியாக கலந்து கொண்டிருந்தார்.

2021ம் ஆண்டுக்கான அரபுக் கிண்ணப் போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி ஆரம்பமானது. 16 நாடுகள் கலந்து கொண்டதில், இன்றைய இறுதிப் போட்டியில் அல்ஜீரியா  மற்றும் தூனுசியா அணிகள் இறுதிப் போட்டிக்காக களம் கண்டன. இறுதியில் அல்ஜீரியா  2-0 என்ற அடிப்படையில் கோல்களைப் பெற்று கிண்ணத்தை சுபீகரித்து.

3வது இடத்துக்கான அணியை தெரிவு செய்யும் போட்டி இன்று மாலை கத்தார் மற்றும் எகிப்து நாடுகளுக்கிடையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் கத்தார் 5-4 என்ற அடிப்படையில் (பெனால்டி) வெற்றி பெற்று 3வது இடத்தைப் பெற்றுக்கொண்டது. அடுத்த ஆண்டு இதே டிசம்பர் 18ம் திகதி கத்தாரில் 2022ம் ஆண்டுக்கான கால்ப்பந்து இறுதிப் போட்டி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தார் டிசம்பர் 18ம் திகதியை ஏன், எதற்கு தேசிய தினமாக கொண்டாடுகின்றது!

Leave a Reply