கத்தாரில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று! இன்றைய தினம் 542 புதிய நோயாளர்கள்!

corona status on 30.12.2021 in Qatar

கத்தாரின் இன்று (டிசம்பர் 30) 500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புள்ளி விபரங்களின் அடிப்படையில் 542 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 380 பேர் சமூகத்திலிருந்தும், 162 வெளிநாடுகளிலிருந்து பயணித்தவர்களில் இருந்தும், அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தின புதிய நோயாளர்களுடன் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை
3822 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் 162 பேர் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 617 ஆக உயர்துள்ளது.

கடந்த சில நாட்களாக கத்தாரில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கத்தாரில் நாளை முதல் (டிசம்பர் 31) புதிய
கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply