கத்தார் முழுதும் இலவச கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் ஆரம்பம்!

COVID-19 PCR tests now available at all 28 PHCC in Qatar

கத்தார் முழுதும் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மருத்து கழகங்களில் கொரோனா கொவிட் 19 பரிசோதனையை மேற்கொள்ளும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்படுபவர்கள் கத்தாரிலுள்ள 28 ஆரம்ப சுகாதார மருத்து கழகங்களில் Primary Health Care Corporation (PHCC) இலவசமாக கொரோனா கொவிட் 19 பரிசோதனையை செய்து கொள்ள முடியும் என்பதாக டுவிட்டர் மூலம் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் பின்வரும் 14 சுகாதார மருத்துவ வழங்களில் மாலை 4 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடையில் drive-through முறையில் வாகனங்களை விட்டு இறங்காமல் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1. அல்வக்ரா
 2. அல்துமாமா
 3. விமான நிலையம்
 4. வெஸ்ட் பே
 5. அபூபக்ர்
 6. மிசைமிர்
 7. அல்வாப்
 8. அல்ராய்யான்
 9. அல்வஜ்பா
 10. உம்மு ஸலால்
 11. ஙராபா
 12. கத்தார் பல்கலைக்கழகம்
 13. லீபய்ப்
 14. அல்கோர்

மேலும் பிரயான நோக்கத்தில் அடிப்படையில் கொரோனா கொவிட் 19 பரிசோதனையை செய்பவர்கள் 160 கத்தார் ரியால்கள் பணம் செலுத்த வேண்டும் என்பதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply