கத்தாரில் தாக்கப்படும் மற்றொரு டெலிவரி பணியாளர் (வீடியோ)

Another Delivery driver attacked in Qatar

கத்தாரில் மற்றொரு டெலிவரி பணியாளர் ஒருவர் தாக்கப்படும் வீடியோவொன்று கத்தாரில் நேற்றைய தினம் (20.112021) வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், Wishbox நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி பணியாளர் ஒரு தாக்கப்பட்ட காட்சி கடந்த 16.11.2021ம் திகதி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

மேற்படி செய்தி வெளியாகி ஓரிரு நாட்களுக்குள் Talabat நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர் கத்தாரின், Pearl பகுதியில் வைத்து வெளிநாட்டு குடும்பத்தலைவர் மற்றும் மனைவி ஆகியோரினால் தாக்கப்படும் காட்சி வைரலாகியுள்ளது. 

குடும்பத்தலைவர் மேற்படி டெலிவரி பணியாளரை கோபத்துடன் வேகத்துடன் தள்ளி விடுவது போன்று அங்கிருந்த ஒருவரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்பதோடு, உரியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இதையும் படிங்க : மத்திய கிழக்கு நாடுகளில் மோட்டார் சைக்கிள் டெலிவரி சாரதிகளாக பணிபுரிபவர்களே! அவசியம் வாசியுங்கள்!

Leave a Reply