கத்தாரிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மாணவிகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்த ஆசிரியர்! விசாரணைகள் ஆரம்பம்

கத்தாரிலுள்ள தனியார் பாடசாலையொன்றில் மாணவிகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்த ஆசிரியர் ஒருவர் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கத்தாரில் இயங்கும் தனியார் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கத்தார் உயர்கல்வி மற்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாட்டில் குறித்த ஆசிரியர் சில மாணவிகளுக்கு மயக்க மாத்திரை வழங்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கத்தாரின் பிரபல சமூக ஆர்வலர் Hassan Al Sai அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, ஆசிரியரின் இந்த செயற்பாடானது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். இதனை செய்ய அவருக்கும் யார் அதிகாரம் வழங்கியது, மேலும் இது தொடர்பான முறையான விசாரணை அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பாடசாலை நிருவாகம் தன்னை தொடர்பு கொண்டு ”இது மேற்படி ஆசிரியர் தனிப்பட்ட செயற்பாடே ஆகும். மேற்படி ஆசிரியர் அந்த தினமே பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும் என தெரிவித்துள்ளதாகவும், அவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத 314 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

Leave a Reply