கத்தாரில் டெலிவரி பணியாளரை தாக்கும் வீடியோ! தாக்கியவர் அதிகாரிகளால் கைது!

man arrested who attacked delivery worker

கத்தாரில் டெலிவரி பணியாளர் ஒருவர் தாக்கப்படும் காட்சி சமூக வலைதள்களில் நேற்றைய தினம் (16.11.2021) வைரலாகியுள்ளது. இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் டெலிவரி பணியாளரை தாக்கும் கூடையொன்றினால் தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி டெலிவரி பணியாளர் இளைஞர் தாக்கும் இடத்திலிருந்து நகரம் போது,  அவர் மீண்டும் மீண்டும் டெலிவரி பணியாளரைத் தொடர்ந்து சென்று தாக்கும் காட்சியை சம்பவ இடத்திலிருந்த ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேற்படி வீடியோ வைரலானதை் தொடர்ந்து தாக்குதல்  மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மனிதபிமானமற்ற செயலை மேற்கொண்ட நபர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் அதிகமானோர் மேற்படி இளைஞசரின் செயலைக் கண்டித்து கருத்துக்களைப் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிறமான நீர்நிலை (VIDEO இணைப்பு)

Leave a Reply