கத்தார் சுரங்கப் பாதையொன்றில் சாகசம் காட்டிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது!

reckless motorist arrested in Qatar

கத்தார் சுரங்கப் பாதையொன்றில் சாகசம் காட்டிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கத்தார் லுசைல் நகரில் அமைந்துள்ள சுரங்கப் பாதையொன்றில், மோட்டார் சைக்கிள் மேல் ஏறி கைகளை விட்டு சாகசம் காட்டியவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் சிக்கி நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இது போன்ற பொறுப்பற்ற செயற்பாடுகள், தனக்கும், பாதையில் பயணிக்கும் ஏனைய வாகனங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். எனவே இது போன்ற செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டம் என்பதாக போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் மேற்படி பொறுப்பற்ற செயலில் சிக்கிய நபர் உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் டெலிவரி பணியாளரை தாக்கும் வீடியோ! தாக்கியவர் அதிகாரிகளால் கைது!

Leave a Reply