கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த 81 கிலோ கஞ்சா அதிகாரிகளால் பறிமுதல் (வீடியோ)

கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல் ருவய்ஸ் துறைமுகத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் காய்கறிகளுடன் சேர்ந்து, மரப் பலகைகளுக்குள் மறைத்த வைத்த நிலையில் 81 கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான காணொளியொன்று கத்தார் சுங்கத் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கத்தாருக்குள் போதைப் பொருட்களை கொண்டுவருபவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிய இடங்களில், போதைப் பொருட்களை கண்டறிவதற்கான நவீன கருவிகள் மூலம் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், போதைப் பொருட்களுடன் யாராவது சிக்கினால் பாரதூரமான தண்டனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  : ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் பங்குபற்ற கத்தார் அதிபர் அமெரிக்கா பயணம்!

Leave a Reply