கத்தாரில் 2021ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 16 பேர் விபத்தினால் பலி, 490 பேர் காயம்!

கத்தாரில் 2021ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 16 பேர் விபத்தினால் பலியாகியுள்ளதோடு , 490 பேர் காயமடைந்துள்ளதாக கத்தார் போக்குவரத்துறைப் பொறுப்பாளர் Colonel Mohamed Radi Al Hajri, அவர்கள் தெரிவித்துள்ளார்கள். காயமடைந்த 490 பேரில் 40 கடுமையான காயங்களுடனும், 450 பேர் சிறிய காயங்களுடனும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதாக கத்தார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்கள்.

தொலைக்காட்சியில், மேலும் கருத்து தெரிவிக்கும் போது, 2021ம் ஆண்டு ஜுன் மாதத்துடன் ஒப்பிடும் போது ஜுலை மாதத்தில் போக்குவரத்து குற்றங்கள் 20.9 விழுக்காட்டினால் குறைந்துள்ளதாக தெரிவித்தார். ஜுன் மாதத்தில் 206,941 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஜுலை மாதத்தில் 164,181 போக்குவரத்து குற்றங்களே பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கத்தார் முழுதும் பொருத்தப்பட்டுள்ள போக்குவரத்து கண்காணிப்பு கெமராக்கள் போக்குவரத்து குற்றங்கள் குறைய பெரிதும் உதவியுள்ளன. அத்துடன் போக்குவரத்து சமிஞ்சைகளும் (signals) போக்குவரத்து குற்றங்கள் குறைய வழி செய்துள்ளன.

பொதுவாக சிக்னல்களில் உள்ள கெமராக்கள் மஞ்சல் பெட்டிகளில் (yellow box) முறையற்ற விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை துள்ளிமாக பதிவு செய்கின்றன. அத்துடன் அவை சீட்பெல்ட், மற்றும் வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பாவித்தல் போன்ற போக்குவரத்து குற்றங்களையும் பதிவு செய்யும் ஆற்றல் கொண்டவை என்றார்.

2021ம் ஆண்டு ஜுலை மாதத்தில் வீதி விபத்துக்களினால், 16 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 பேர் கடுமையான காய்களுக்கு உள்ளானதாகவும், 450 பேர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஜுலை மாதத்தில் 5020 வாகன ஓட்டுநர் உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4463 பேர் வெளிநாட்டவர்கள் என்பதாக Colonel Mohamed Radi Al Hajri அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த 81 கிலோ கஞ்சா அதிகாரிகளால் பறிமுதல் (வீடியோ)

Leave a Reply