Qatar Tamil News

கத்தாரில் கொரோனா தாக்கம் கூடிய சிவப்பு பட்டியல் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கத்தார் கொரோனா தாக்கம், பாதிப்பு அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில் சிவப்பு பட்டியல் நாடுகள், மஞ்சல் பட்டியல் நாடுகள், பச்சைப் பட்டியல் நாடுகள் என பிரித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சிவப்பு பட்டியல் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி சிவப்பு பட்டியல் நாடுகளின் எண்ணிக்கை 153லிருந்து 167 ஆகவும், மஞ்சல் பட்டியல் நாடுகளின் பட்டியல், 33லிருந்து 27 ஆகவும், பச்சை நிறப்பட்டில் நாடுகளின் எண்ணிக்கை 21லிருந்து 11 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலானது ஆகஸ்ட் 23ம் திகதி முதல் நடைமுறையாகின்றது.

என்றாலும், ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மேற்படி பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. சிவப்பு, மஞ்சல், பச்சை பட்டியல்களுக்கான நாடுகளை கீழே வரும் இணைப்பில் சென்று பார்வையிட முடியும்.

Red List Counites View/Download
Yellow List Counites View/Download
Green List Counites View/Download

இதையும் படிங்க : ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களை கத்தார் அதிபர் நேரடியாக சந்தித்து கௌரவிப்பு!

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: