ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களை கத்தார் அதிபர் நேரடியாக சந்தித்து கௌரவிப்பு!

Qatar Emir Meet Olympic Hero's

கத்தார் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றி இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் ஆகியவற்றை வென்று வரலாறு படைத்த வீரர்களை கத்தாரின் அதிபர் ஷெய்க் தமீன் பின் ஹமத் அல்தானி அவர்கள் இன்று காலை சந்தித்து கௌரவிப்படுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் பாய்தல், பளு தூக்குதல் போன்றவற்றில் தங்கப்பதக்கமும், பீச் கரப்பந்தாட்டத்தில் வெண்கலப்பதக்கத்தையும் கத்தார் வென்றிருந்தது.

கத்தார் சார்பாக கலந்து கொண்டு 2020 ஒலிம்பிக் உயரம் பாய்தலில் தங்கப்பதற்கத்தையும், 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும், 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தையும் வென்று கத்தாரின் வரலாற்று நாயகனாக திகழும், Mutaz Barshim அவர்களுக்கு கத்தாரில் அதிபரினால், அல்வஹ்பா Decoration பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கத்தார் அதிபர் ஏனைய வீரர்களுக்கும் தனது வாழ்த்து்களை தெரிவித்ததோடு கத்தா் ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள், உட்பட ஏனையவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Qatar Emir Meet Olympic Hero's

Also Read : கத்தாருக்கு மருந்துப்பொருட்களுடன் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! நீங்கள் கைது செய்யப்படலாம்

Leave a Reply