கத்தாருக்கு மருந்துப்பொருட்களுடன் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! நீங்கள் கைது செய்யப்படலாம்

prohibited medicines in Qatar

prohibited medicines in Qatar –

கத்தாருக்கு மாத்திரைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கத்தாரில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களை தங்களுடன் எடுத்துக் வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதாக கத்தாரில் அமைந்துள்ள இந்திர தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா உட்பட நாடுகளில் பாவிக்கப்படும் சில மருந்துப் பொருட்கள் கூட கத்தாரின் சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம். எனவே மருந்துப் பொருட்களை கொண்டுவருபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மருந்துப் பொருட்களை கொண்டுவரும், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியசாலைகள், மற்றும் வைத்தியர்களின் சிபாரின் அடிப்படையில் 30 நாட்களுக்கு கொண்டுவர முடியும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பட்டியலை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று கண்டு கொள்ள முடியும்.

prohibited medicines in Qatar மருந்துப் பொருட்களின் பெயர்ப்பட்டியல் – 

இதையும் படிங்க : இலங்கையில் அமைந்துள்ள கத்தார் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Leave a Reply