இலங்கையில் எகிரும் கொரோனா மரணங்கள், கடந்த ஒரே நாளில் 214 பேர் பலி!

கொரோனாவின் தாக்கம் இலங்கையில் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக அரச  புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள் ஒன்றுக்கு 4000 ஆயிரம் புதிய நேயாளர்களை விட அதிக எண்ணிக்கையினர் பதிவாவதோடு, கொரோனாவினால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை அரசாங்க திணைக்களத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையின் படி கடந்த ஆகஸ்ட் 27ம் திகதி (நேற்று) 214 புதிய கொரோனா மரண சம்பவர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 ஆண்களும், 94 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,371ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிலவரம் எண்ணிக்கை
புதிய தொற்றாளர்கள் 4591
மொத்த தொற்றாளர்கள் 416961
புதிய மரணங்கள் 214
மொத்த மரணங்கள் 8371

Corona Deaths in Sri Lanka

Leave a Reply