கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி விரைவில் ஆரம்பம்!

Qatar to administer third dose of Covid-19 vaccine

கத்தாரில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் பொது சுகாதார அமைச்சு குறிப்பிட்ட சில நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு Pfizer-BioNTech and Moderna போன்ற மூன்றாவது (Dose) தடுப்பூசிகளை வழங்க அண்மையில் அனுமதி வழங்கியது. அந்த அடிப்படையில் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பின்வரும் அம்சங்களை கொண்டவர்களுக்கு மாத்திரம் மூன்றாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

  • தற்போது புற்றுநோயிற்காக தொடர் சிகிச்சை பெற்றுவரும் தனிநபர்கள்
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகளைப் பயன்படுத்தும் நபர்கள்
  • கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • மிதமான அல்லது கடுமையான முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு கொண்ட நபர்கள்
  • மேம்பட்ட HIV தொற்றுடையவர்கள்
  • நாட்பட்ட நோயினால் பெறும் சிகிச்சை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி நலிவடைந்தவர்கள்
  • ஆஸ்ப்லீனியா மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நிலைமைகள் கொண்ட நபர்கள்.

ஏற்கனவே இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்கள், ஆரம்பி சுகாதார மையங்களை தொடர்பு கொண்டு மூன்றாவது கொரோனா தடுப்பூசி தொடர்பான உரிய விடயங்களை உறுதிப்படுத்தி, பின்னர் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் கொரோனா தாக்கம் கூடிய சிவப்பு பட்டியல் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Leave a Reply