துபாயில் விபத்தில் சிக்கிய இலங்கைப் பெண்ணுக்கு 1 மில்லியன் திர்ஹம் காப்பீடு வழங்க உத்தரவு

துபாயில் பணிபுரிந்த, இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்காக துபாய் நீதிமன்றத்தால் 1 மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

45 அகவையை கொண்ட தரங்க தில்ருக்ஷி என்ற பெண் விபத்தின் காரணமாக சக்கர நாற்காலியின் உதவியில் நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனையடுத்து, தமது காயங்களுக்கு இழப்பீடு கோரி, ஒரு வருட கால நீதிப் போராட்டத்திற்குப் பிறகு, அவருக்கு சுமார் 54 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பீட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக Gulf news தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 24ஆம் திகதி, பர் துபாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள ஜீப்ரா கிராசிங்கில் இடம்பெற்ற விபத்தில் தில்ருக்ஷி காயமடைந்தார்.

சாலையை கடக்கும்போது, தில்ருக்ஷி காயமடைந்தார். இதனையடுத்து குறித்த ஓட்டுனருக்கு எதிராக போக்குவரத்து நீதிமன்றம் 5,000 திர்ஹம் அபராதம் விதித்தது. எனினும் இந்த தணடனையை எதிர்த்து, தில்ருக்ஷிக்கு சட்டக் குழு ஒன்று உதவியது.

இதன்படி விபத்து காயங்கள் காரணமாக, திருக்ஷிக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ வசதி தேவை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்ட வாதத்தின் அடிப்படையில் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட தில்ருக்ஷிக்கு 54 மில்லியன் ரூபாவை, நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டது.

இந்த நட்டஈட்டை காப்புறுதி நிறுவனம் ஒன்று வழங்கவுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.(JM)

Original News – Gulf News

இதையும் படிங்க : கத்தாருக்கு மருந்துப்பொருட்களுடன் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! நீங்கள் கைது செய்யப்படலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *