கத்தாரில் இன்று மழை பெய்யும் சாத்தியம் – வானிலை அவதான நிலையம் தகவல்

Rain in Qatar Expected Today - Met Says
கத்தாரில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடல் மற்றும் கடலை அண்மித்த பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடும் என்பதோடு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதாக திணைக்களம் விடுத்துள்ள காலநிலை அவதான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடலலைகள் 10 அடி வரை உயரும் என்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இன்றைய தினம் கத்தாரில் 33-37 பாக செல்சியல் வரையான வெப்பநிலை காணப்படுவதோடு,  தூசிக் காற்றுடன் கலந்த மேக மூட்டமும் காணப்படும். அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply