கத்தாரிலுள்ள நிதி நிறுவனங்களுக்கான பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

Qatar Central Bank announce Eid Al Adha holiday for banks

எதிர்வரும் 20ம் திகதி கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்களுக்கான விடுமுறை பற்றி அறிவித்தலை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், நிதி முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி ஆலோசனை மையங்கள் போன்றவற்றுக்கான விடுமுறை எதிர்வரும் ஜுலை 18ம் திகதி ஆரம்பமாகும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறைக்காக மூடப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்கள் எதிர்வரும் 25ம் திகதி முதல் மீண்டும் பணிக்கு திரும்பும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read : கத்தாரில் ஹஜ் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

 

Leave a Reply