கத்தாரில் ஹஜ் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

2021-haj-festival-holiday-in-qatar

கத்தாரில் எதிர்வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்பை அரசாங்கம் விடுத்துள்ளது. ஜுலை 20ம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகள் எதிர்வரும் ஜுலை18ம் திகதி முதல் ஆரம்பமாகி ஜுலை மாதம் 25ம் திகதி வரை நீடிக்கும்.

அரச ஊழியர்கள் ஜுலை 26ம் திகதி முதல் பணிக்கு திரும்புவர்கள். அத்துடன் கத்தார் மத்திய வங்கியின் கீழ் இயங்கும், வங்கிகள், மற்றும் நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகளை மத்திய வங்கியாலேயே தீர்மானிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தரை பெருநாள் தினம், அத்துடன் மேலும் இரு தினங்கள் என்ற அடிப்படையில் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் ஹஜ்ஜுப் பெருநாள் ஜுலை 20ம் திகதி, செவ்வாய்க்கிழமை கொண்டாப்படுவதனால், செவ்வாய்(ஜுலை-20), புதன்(ஜுலை-21), மற்றும் வியாழன் (ஜுலை-22) ஆகிய தினங்களில் தனியாருக்கு விடுறையாக இருக்கும்.

அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

இதையும் படிங்க: கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply