கொரோனா தடுப்பூசி பெற்று இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க இருப்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

Important notice for travelers from Sri Lanka to Qatar after vaccine

கடந்த 12ம் திகதி முதல் கத்தாரில் சுற்றுலா விசா மற்றும் குடும்ப விசாக்கள் போன்றவை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, புதிய பயண விதிமுறைகளை கத்தார் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைப்படி, இலங்கையர்கள் கத்தாருக்கு பயணிக்க கடைபிடிக்க வேண்டிய விடயங்களை கத்தார்
ஏர்வெய்ஸ் அறிவித்துள்ளது.

அதன்படி கத்தார் சுகாதார அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பூசியை கடந்த 12 மாதங்களுக்கு போட்டுக் கொண்டவர்கள், அத்துடன் இரண்டாவது தடுப்பூசி டொஸ்ஐ செலுத்தி 14 நாட்கள் கடந்தவர்கள் சுற்றுலா வீசா அல்லது குடும்ப விசா மூலம் கத்தாருக்கு பயணிக்க முடியும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்

  • Pfizer/Biontech Vaccine (Comernate)
  • Moderna Vaccine (Spikeefax)
  • AstraZeneca Vaccines (Covershield/Oxford/Vaxepheria)
  • Janssen/Johnson & Johnson Vaccine (One Dose)

நிபந்தனைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி
Sinopharm vaccine

நிபந்தனைகளுடன் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கத்தாருக்கு பயணிப்பவர்கள், விமான நிலையத்தில் வைத்து antibody test க்கு உட்படுத்தப்படுவார்கள்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பின்வரும் தகவல்களை உள்ளடக்கி இருத்தல் வேண்டும்

1. கடவுச்சீட்டில் உள்ளது போன்ற சான்றிதழில் பெயர்
2. முதலம், மற்றும் இரண்டாம் டொஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கான திகதிகள் தெளிவாக எழுதப்பட்டிருத்தல் வேண்டும்
3. தடுப்பூசியின் வகை மற்றும் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருத்தல்
4. தடுப்பூசி வழங்கிய அதிகார சபையின் உத்தியோக பூர்வ முத்திரை பொறிக்கப்பட்டிருத்தல்

மேற்படி தகவல்கள் அனைத்தும் இலங்கை விமான நிலையத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். முறையாக தகவல்கள் சமர்ப்பிக்கப்படாதவிடத்து விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டமாட்டார்கள். அத்துடன் பயணிகள் கத்தார் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படுவர்கள் கத்தார் ஏர்வெய்ஸின் விற்பனைப் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும் என்பதாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரிலிருந்து பெருநாளைக்கு தாயகம் திரும்ப இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

Leave a Reply