Sri Lanka

கத்தாரிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் கைது

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கத்தாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தி தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை..!

Related Articles

Leave a Reply

Back to top button
%d