Sri Lanka

வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தி தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை..!

கொரோனா தடுப்பூசியின் இரண்டு doses களையும் பெற்று 14 நாட்கள் கழித்து இந்நாட்டிற்கு பிரவேசிக்கும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்தல் இன்றி அவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Back to top button
%d