கத்தாரில் அதிக வெப்ப காலநிலையால் drive-through சேவை நேரங்களில் மாற்றம்!

Qatar Drive Through

கத்தாரில் தற்போது கடும் சூட்டுடன் கூடிய காலைநிலை நிலவுவதனால் drive-through நிலையங்கள் மூலமாக வழங்கப்படும் தடுப்பூசி சேவையில் நேர மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன்படி எதிர்வரும் 13ம் திகதி முதல், drive-through தடுப்பூசி மையங்கள் மாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரையில் சேவையில் ஈடுபடவுள்ளது. கத்தாரின் லுசைல் நகரில் ஒரு கொரோனா drive-through மையமும், அல் வக்ரா நகரில் மற்றொரு drive-through அமைந்துள்ளது. மேற்படி இரு drive-through மையங்களின் உதவியுடன் இது வரை 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு மேலும், தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply