Sri Lanka

வெளிநாடுகளில் தடுப்பூசி பெற்று தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை

வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பும் இலங்கையர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் பற்றிய சுற்றறிக்கையை  இலங்கை சுகாதார அமைச்சு இற்றைப்படுத்தி வெளியிட்டுள்ளது. இந்த சுற்று நிரூபமானது 06.06.2021 முதல் எதிர்வரும் 30.06.2021 வரை பின்பற்றப்படவுள்ளதோடு நிலைமைகளை கருத்திற்கொண்டு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதாக சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் முழுமையாக தடுப்பூசி பெற்று (இரண்டு டோஸ்), இரண்டு வாரங்களை கடந்த இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட அவசியமில்லை. என்றாலும் அவர்கள் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து தடுப்பூசியைப் பெற்ற நிலையில்  இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை.

முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் ஹோட்டல்களில் அல்லது அரச தனிமைப்படுத்தல் மையங்களில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தாயகம் வர விரும்புவர்கள்

1. தாயகம் திரும்புவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு PCR செய்திருத்தல் கட்டாயமாகும்.
2. தடுப்பூசி பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழை ஆங்கிலத்தில் பெற்றிருத்தல்
அவசியம் என்பதோடு , தாங்கம் திரும்பிய உடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க : Click Here

Related Articles

Leave a Reply

Back to top button
%d