கத்தாரிலுள்ள இலங்கை முஸ்லிம் அமைப்பினால் ஒரு தொகுதி சிலிண்டர்கள் இலங்கைக்கு அன்பளிப்பு

FSMA Qatar Donates 60 Oxygen Cylinders to Sri Lankan Government

கத்தாரில் இயங்கிவரும் இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் (FSMA – Q) அங்கத்துவ அமைப்புக்களின் நிதியுதவியுடன் இலங்கை அரசாங்கத்திற்கு 60 ஒட்சிசன் சிலிண்டர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (11) கத்தாரிலுள்ள இலங்கை முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Sri Lankan Muslim Association – FSMA) கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் கையளித்தது.

இந்நிகழ்வில் FSMA அமைப்பு, இலங்கைக்கான கட்டார் தூதுவர், மொஹமட் மபாஸ் மொஹிடீனிடம் குறித்த பொருட் தொகுதிகளை கையளித்தனர்.

இலங்கை தூதரகத்தினால் குறித்த 60 ஒட்சிசன் சிலிண்டர்களும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக பல அர்ப்பணிப்பு களையும் தியாகங்களையும் செய்த அனைவருக்கும் தாமும் அதேபோல் தூதரகம் சார்பாகவும் மனப்பூர்வமாக நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனத்தின் தலைவர் தெரிவிக்கையில், இந்த திட்டத்தை மிகவும் துரித கதியில் அதேநேரம் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஆதரவு மற்றும் பங்களிப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கத்தார் சம்மேளனம் பல்வேறு சமூகப் பணிகளை இலங்கையில் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

(நன்றி – தினகரன்)

Leave a Reply