கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன் பரிசோதனை போதுமானது – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல்

Sri Lankan Airlines

கத்தாரிலிருந்து இலங்கை செல்ல அன்டீஜன் பரிசோதனை போதுமானது என்பதாக  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கத்தாரில் கொரோனா பரிசோதனைக்காக அன்டீஜன் விரைவு பரிசோதனை அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தாரிலிருந்து இலங்கை செல்ல விரும்புபவர்கள் அன்டீஜன் பரிசோதனை செய்து நெகடிவ் பெறுபேற்றைக் கொண்டிருந்தால் அவர்கள் இலங்கை பயணிக்க முடியும் என்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

PCR மற்றும் அன்டீஜன் ஆகிய இரண்டு பரிசோதனைகளையும் செய்து கொண்டு தாயகம் செல்ல முடியும். அன்டீஜன் பரிசோதனையாக இருந்தால் பயணிக்க 48 மணித்தியாலங்களுக்குள்ளும், PCR பரிசோதனையாக இருந்தால் பயணிக்க 96 மணித்தியாலத்திற்குள்ளும் நெகடிவ் பெறுபேற்றைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் அன்டீஜன் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ நிலையங்கள்

 

Leave a Reply