கத்தாரில் விமான நிலையத்தில் பொதிகளை சோதனை செய்ய புதிய தொழில்நுட்பம்

Qatar Airport New Technology

கத்தாரில் விமான நிலையத்தில் சோதனைகள் மேற்கொள்ள, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கினற்ன.

அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்புத் திரையிடல் துறையில்  உலகளவில் முன்னனியில் திகழும், Smiths Detection நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட திரையிடல் தொழில்நுட்பம் கத்தாரின் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் கத்தார் விமான நிலையத்தில் பயணிகளின் பொதிகளில் உள்ள திரவப்பொருட்கள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் போன்ற தரமான முறையில் சோதனை செய்யப்படவுள்ளன. எனவே பயணிகள் பொதிகளில் உள்ள திரவப் பொருட்கள், இலத்திரனியல் பொருட்களை இனிவரும் காலங்களில் நீக்கத் தேவையில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை மேற்கொள்ள சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிகப்பட்டுள்ள நிலையில், பயணிகள் தங்களது பாதனிகளை கழட்ட வேண்டிய தேவை இனி ஏற்படாது என்பதாக விமான நிலைய உப தலைவர் Saeed Yousef al-Sulaiti, அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply