பிரபல மார்க்க அறிஞர் யூஸுப் அல்-கா்ளாவிக்கு கொரோனா தொற்று

பிரபல மார்க்க அறிஞர் யூஸுப் அல்-கா்ளாவி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை யூஸுப் அல்-கா்ளாவி அவர்களது தனது டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், இறைவனுக்கே அனைத்து புகழும் என்பதாக தெரிவித்துள்ளதோடு, தன்னை உங்களது பிரார்த்தனைகளிலும் இணைத்துக் கொள்ளுங்கள் என்பதாக தன்னை பின்தொடர்பவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகில் பெருமளவு முஸ்லிம்களாக மதிக்கப்படுகின்ற மார்க்க அறிஞர் யூஸுப் அல்-கா்ளாவி அவர்களுக்கு தற்போது வயது 94 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply