கத்தாரில் ஜும்ஆத் தொழுகைக்காக அதான் சொல்வதற்கு 10 நிமிடங்களின் முன்னர் பள்ளிவாசல் திறக்கப்படும்

கத்தாரில் ஜும்ஆத் தொழுகைக்காக அதான் சொல்வதற்கு 10 நிமிடங்களின் முன்னர் பள்ளிவாசல் திறக்கப்படும் என்பதாக இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு இன்று அறிவித்துள்ளது. ஜும்ஆப் பிரசங்கத்தை நடாத்த இமாம் மிம்பரில் அமர்ந்தவுடன் சொல்லப்படும் அதானிற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே திறக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் கத்தாரில் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தொழுகைக்காக அதான் சொல்லப்பட்டு 5 நிமிடங்களில் தொழுகை ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் இந்த விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதான் சொல்லப்பட்டு 5 நிமிடங்களில் தொழுகை நடத்துங்கள் – கத்தாரில் புதிய சுற்று நிரூபம்!

Leave a Reply