ஒரே நாளில் 9 மரணங்கள், 989 புதிய தொற்றாளர்கள்! கத்தாரில் இன்றைய(ஏப்-15) கொரோனா நிலவரம்

கடந்த 24 மணித்தியாலத்தில் (15.04.2021) புதிதாக 989 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 9 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்காக சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை  21,610 ஆக உயர்ந்துள்ளது.

வகை இன்றைய நிலவரம் (13-04.2021) மொத்த எண்ணிக்கை
புதிய தொற்றாளர்கள் 989 193,952
குணமடைந்தவர்கள் 601 171,985
மரணங்கள் 8 348
வழங்கப்பட்ட புதிய தடுப்பூசிகள் 23,712 1,183,191
புதிய PCR எண்ணிக்கை 11,120 1,825,071
கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,
  • வெளியில் செல்லும் போது முகக் கவசத்தை அணிந்து கொள்ளுமாறும்,
  • சமூக இடைவெளியகளைப் பேணிக்கொள்ளுமாறும்,
  • கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள கத்தார் சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ள அனைத்துமுன்னெச்சரிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply