கத்தாரில் இன்றிரவு மழை பெய்யும் சாத்தியம் – வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறல்

கத்தாரில் இன்றிரவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாளாந்த வானிலை அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை வரை கடலை அண்டிய பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும். இந்த வேளையில் இடியும், கூடிய அல்லது, வேகமாக காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றுடன் கூடிய மழைபெய்யும் போது கடலலைகள், 1- 3 அடி வரை உயரும் என்பதாகவும்,  இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடலலைகள் 3-5 அடிகள் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply