அதான் சொல்லப்பட்டு 5 நிமிடங்களில் தொழுகை நடத்துங்கள் – கத்தாரில் புதிய சுற்று நிரூபம்!

கத்தாரில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டு 5 நிமிடங்களில் தொழுகை நடத்துங்கள்  என்பதாக கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு மசூதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் தொழுகை முடிந்து 5 நிமிடங்களில் பள்ளிவாசல்கள் மூடப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக நேற்று வெளியிட்டுள்ள புதிய சுற்று நிரூபத்தில்,

  • தொழுகைக்காக மஸ்ஜித்திகளுக்கு வருபவர்கள் தொழுகை விரிப்புக்களை கொண்டுவருதல் வேண்டும்,
  • முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்,
  • இஹ்திராஸ் செயலியில் பச்சை நிறத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்,
  • சமூக இடைவெளிகளைப் பேண வேண்டும்,
  • 12 வயதை விட சிறியவர்கள் பள்ளிவாசலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்
  • இப்தார் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்ய முடியாது எனவும்,

இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சின் (அவ்காப்) மசூதிகள் முகாமைத்துவ திணைக்களம். பள்ளிவாசல் இமாம்கள், மற்றும் முஅத்தின்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply