கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுமுறைத் தினங்கள் பற்றி விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல்!

Sri Lanka Embassy in Qatar

கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் விடுமுறைத் தினங்கள் பற்றி விடுத்துத்துள்ள முக்கிய அறிவித்தல் ஒன்றை இன்று (28.04.2021) வெளியிட்டுள்ளது. அதில் தூதரகம் விடுமுறைக்காக மூடப்படும் தினங்கள் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கத்தாரில் பொது விடுமுறை வழங்கப்படும், இரண்டு ஈத் பெருநாள் தினங்களிலும், கத்தாரின் தேசிய தினம், மற்றும், தேசிய விளையாட்டு தினம் போன்ற நாட்களிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் பௌர்ணமி தினங்களில் வரும் போயா நாட்களிலும், இலங்கையின் முக்கிய பெருநாள் தினங்களிலும் கத்தாரிலுள்ள இலங்கைத் தூரதகம் மூடப்பட்டிருக்கும். மொத்தமாக 2021ம் ஆண்டு 20 நாட்கள் தூதரகப் பணிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *