Sri Lanka

இலங்கையில் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று! இன்று 1096 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில்  இன்றைய தினம் (27.04.2021) இதுவரையில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 1000ம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

அதனடிப்படையில் இலங்கையில் 103,472 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 276 பேர் இன்று (27) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 647 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d