Qatar Tamil News

கத்தாரில் பீபா உலகக் கிண்ணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்

உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்தத் தயார் என்று கத்தார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொள்ளும் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுள்ளார்களா என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும் கத்தார் கூறியது.

அது குறித்து தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் பேசிவருவதாக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி (Sheikh Mohammed bin Abdulrahman al-Thani) தெரிவித்தார்.

COVID நோய்ப்பரவல் இல்லா உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகக்கிண்ணக் காற்பந்து போட்டியின் அனைத்து ஆட்டங்களும் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்கள் சூழ நடத்தப்படும் என்று FIFA அண்மையில் தெரிவித்திருந்தது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d