இலங்கையில் வசிக்கும் சவூதி பிரஜைகளை உடன் நாடு திரும்புமாறு அறிவுறுத்தல்

இலங்கை மற்றும் ஏனைய 4 ஆசிய நாடுகளில் வசிக்கும் சவூதி மக்களை விரைவில் நாடு திரும்புமாறு சவூதி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த மாதம் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரியாத் முடிவு செய்தாலும் குறித்த இந்த நாடுகளில் இருந்து விமானங்கள் எதுவும் கிடைக்காது என்பதால் இவ்வாறு நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இதில் அடங்குவதாக டான் செய்தித்தாள் (Dawn Newspaper)செய்தி வெளியிட்டுள்ளது.
சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) நேற்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பயணிக்கும் விமான சேவைகளை சவூதி அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply