கத்தாரில் 2020ம் ஆண்டு 138 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பு!

கத்தாரில் 2020ம் ஆண்டு 138 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சு தகவல்கள் வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டு வாகன விபத்துக்களினால் 154 உயிரிழந்ததாகவும், 2019ம் ஆண்டுடன் 2020ம் ஆண்டை ஒப்பிடும் போது உயிரிழப்புக்கள் 10 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கத்தார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2014ம் ஆண்டு தொடக்கம் கத்தார் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 
2014ம் ஆண்டு 228 பேரும்,
2015ம் ஆண்டு 227 பேரும்,
2016ம் ஆண்டு 178 பேரும்,
2017ம் ஆண்டு 177 பேரும்,
2018ம் ஆண்டு 168 பேரும்,
2019ம் ஆண்டு 154 பேரும்,
2020ம் ஆண்டு 138 பேரும் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply