வெளிநாடுகளில் தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி , PCRடன் இலங்கை திரும்ப நடவடிக்கை!

வெளிநாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி , PCRடன் இலங்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (11.03.2021) தெரிவித்துள்ளார்கள். 

இது பற்றி அவர்கள் மேலும் அவர் தெரிவித்தாவது, 

“நாங்கள் கடந்த திங்களன்று சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தோம், தொழில்நுட்பக் குழுவுடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடாத்த அவர்கள் ஒரு வாரம் அவசாகம் கேட்டார்கள், அடுத்த வாரம் தங்கள் முடிவை முன்வைப்பார்கள்” என்றார்

மேலம், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏழு நாட்கள் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் முடித்த பின்னர், ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதாகவும், இது தொடர்பான முன்மொழிவு சுகாதார அமைச்சிற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply