கத்தாரில் மார்ச் 21க்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போடாத ஊழியர்கள் பாடசாலைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்!

மார்ச் 21ம் திகதிக்கு முதல் கோவிட் தடுப்பூசி போடாத ஊழியர்களை பாடசாலைகளில் அனுமதிக்கப்படமார்க்கள் என்பதாக கல்வியமைச்சு அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரில் கொரோனாவுக்கான தடுப்பூசிபரவலாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 அத்துடன் கத்தார் நாட்டில் பாடசாலை ஆசிரியர்கள் குறுகியகால கோடை விடுமுறையில் விமான பயணம் மேற் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இரண்டாவது செமஸ்டர் பரீட்சைக்குப் பிறகு மார்ச் 13 முதல் மார்ச் 18 வரை விடுமுறை கிடைக்கும். கோவிட் கால சூழலாக இருப்பதால் குறுகிய விடுப்பில் விமான பயணம் மேற்கொண்டால் சரியான நேரத்தில் கத்தாதிரும்புவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply