Qatar News
எதிர்வரும் நாட்களில் கத்தாரின் வெப்பநிலை படிப்படியாக உயரும் – வானிலை அவதான நிலையம் தகவல்!

எதிர்வரும் நாட்களில் பகல் நேரங்களில் வானிலை மிதமானதாக இருக்கும், சில பகுதிகளில் வெப்பநிலை 30 பாகைக்கு மேல் இருக்கும் என கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. கத்தார் வானிலை தொடர்பான இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
“திங்கள் முதல் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பகல்நேரங்களில் கணிசமாக உயரும்” என்பதாகவும், அது 40 ° செல்சியஸ் வரை உயரக் கூடும் என்பதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
