பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய கத்தார் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலமானது செனயா வீதி இலக்கம் 52ல் அமைந்துள்ள பட்டறைகள் மற்றும் போக்குவரத்து துறை வளாகத்திற்கு அருகில் டிசம்பர் மாதம் 10ம் திகதி முதல் 24 திகதி வரை மாலை 3 மணிக்கும் இரவு 6 மணிக்கும் இடையில் நடைபெறுகிறது.
சட்ட ரீதியான பிரச்சினைகள், மற்றும் நிதி ரீதியான பிரச்சினைகள் எதுவும் அற்ற வாகனங்களே ஏலத்தில் விற்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
மேலும் ஏலத்திற்கு விடப்படவுள்ள வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்புவர்கள் டிசம்பர் மாதம் 2ம் திகதிக்கும் 7ம் திகதிக்கும் இடையில் நன்பகல் 3 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேற்படி ஏலம் நடைபெறும் இடத்திற்கு வந்து பார்வையிட முடியும் என்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தாரில் நீங்கள் பார்க்க வேண்டிய 7 இடங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்